தர்மபுரி : முதியவர் தற்கொலை

தர்மபுரி : முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள உடல் நலக்குறைவால் மனம் உடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் கீழ்புரிக்கல் பகுதியை சேர்ந்தவர் சின்ன சித்தன் இவர் உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5ம் தேதி சின்ன சித்தன் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சின்னசித்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சின்ன சித்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story