உடல்நல கோளாறால் முதியவர் தற்கொலை

உடல்நல கோளாறால் முதியவர் தற்கொலை

தற்கொலை 

திருச்சி மாவட்டம், மணக்கால் பகுதியில் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மணக்கால் பழையத் தெருவைச் சேர்ந்தவர் 55 வயதான பிச்சைமுத்து. இவர் கடந்த 2013 ம் ஆண்டு தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து படுக்காயமடைந்தார்.இதனையடுத்து அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார்.அதன் பிறகும் கால் மற்றும் இடுப்பு வலி குறையவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story