சிவகிரியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி கக்கன்சி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகையா மகன் சுப்பிரமணியன் (வயது 75). இவருக்கு தங்கமலையம்மாள், சண்முகத்தாய் என்ற இரண்டு மனைவி கள் உண்டு. தங்கமலையம்மாளுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சண்முகத்தாய்க்கு குழந்தைகள் இல்லை. அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில், சுப்பிர மணியன் 2வது மகளான களஞ்சியம் என்பவரின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காவிட்டாலும் சுப்பிரமணியன் சென்றுள்ளார். அப்போது அவரை உன்னை யார் இங்கு அழைத்தார்கள் என களஞ்சியம் கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த சுப்பிரமணியன் தனது வீட்டிற்கு வந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் சண்முகலட்சுமி வழக்கு பதிவு செய்து சுப்பிர மணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.