முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை
முதியவர் தற்கொலை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கே,ஆலங்குளத்தை சேர்ந்த வேலு (70)என்ற முதியவர் இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட பொதுமக்கள் இவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், இதை குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story