விருதுநகர்: முதியவர் தற்கொலை

விருதுநகர்: முதியவர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் கடம்பன் குளம் பகுதியில் வயிற்று வலி காரணமாக முதியவர் விஷம் அருந்தி தற்கொலை
விருதுநகர் மாவட்டம், கடம்பன் குளம் பகுதியில் வயிற்று வலி காரணமாக முதியவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், கடம்பன் குளம் பகுதியைச் சார்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 70 இவருடைய மனைவி குருவம்மாள். பாலகிருஷ்ணனுக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும் அதன் காரணமாக வயிற்று வலி அடிக்கடி ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. வயிற்று வலிக்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் வயிற்று வலி குணமடையாத காரணத்தினால் அந்த வழியை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என அடிக்கடி பாலகிருஷ்ணன் வீட்டில் கூறி வந்துள்ள

இதை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலகிருஷ்ணன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story