கொத்தனார் விஷ மாத்திரை தின்று தற்கொலை

கொத்தனார் விஷ மாத்திரை தின்று தற்கொலை
X
தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (65). கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் உள்ள குளியல் அறையில் செல்வராஜ் வழுக்கி விழுந்ததில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சரியாக குணமடையாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வேலைக்கு செல்ல முடியாததால் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது செல்வராஜ் விஷ மாத்திரையை தின்று வீட்டில் மயங்கி நிலையில் காணப்பட்டார். ஆபத்தான நிலையில் கடந்தவரை அவரது மனைவி அஸ்வதி மற்றும் உறவினர்கள் உதவியுடன் மீட்டு அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக செல்வராஜ் இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story