காங்கேயம் அருகே விஷம் குடித்து முதியவர் பலி

காங்கேயம் அருகே விஷம் குடித்து முதியவர் பலி

பைல் படம்

காங்கேயம் அருகே விஷம் குடித்து முதியவர் பலியானது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொணடது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வீரணம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் சேமலையப்பன் வயது 73. இவர் கடந்த 3 வருடங்களாக சக்கரை நோய் மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும், மருந்து உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏதோ மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்த உறவினர்கள் சேமலையப்பன் மகன் வேலுச்சாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பேச்சு மூச்சு இல்லாமல் வாயில் நுரை வழிந்து கிடந்த முதியவர் சேமலையப்பனை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காங்கேயம் போலிஷார் வழக்கு பதிவு செய்து இந்த தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story