இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் - முதியவர் பலி

விபத்தில் பலியானவர்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த காடையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி வயது 65. இவருக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவர் நேற்று இரவு சொந்த வேலையாக தனக்கு சொந்தமான மொபட்டில் ஆண்டிபுதூர் சென்றுவிட்டு மீண்டும் வீணம்பாளையம் திரும்பினார்.
அப்பொழுது காட்டுபாளையம் அருகே வந்த கொண்டிருந்த போது எதிர் திசையில் அவினாசி பாளையத்தை சேர்ந்த பிரபு வயது 24 என்பவர் வந்த மோட்டார் பைக் எதிர்பாராத விதமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். இதில் இருவரும் பலத்த இரத்த காயமடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்த பிரபு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதனை அடுத்து ஊதியூர் போலிசார் இந்த விபத்து குறித்து காவல்துறயினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
