டிப்பர் லாரி மோதி முதியவர் பலி
விபத்து
புதுக்கோட்டை மாவட்டம், சோலைப்பட்டி பகுதியில் டிப்பர் லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை நத்தம்பண்ணை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(55).இவர் சம்பவத்தன்று பைக்கில் கந்தர்வகோட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தார். புதுக்கோட்டை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சோலைப்பட்டி அருகே வந்தபோது, தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாஸ்கர் அதே இடத்தில் உயிரிழந்தார். ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story