தடுப்பணையில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

தடுப்பணையில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

பைல் படம் 

ஏரல் அருகே தடுப்பணையில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் கனகராஜ்(62). இவரும், இவரது உறவினா் ஆறுமுகம் என்பவரும் ஏரல் அருகேயுள்ள மங்கலகுறிச்சி தடுப்பணையில் குளிப்பதற்காக நேற்று மாலையில் சென்றனராம். அப்போது கனகராஜ் எதிா்பாராமல் நீரில் மூழ்கினாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனா். அவரும் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story