மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவர் சாவு

X
உயிரிழப்பு
கொண்டலாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63).ஓய்வு பெற்ற இன்சூரன்ஸ் அலுவலர். இவரது மனைவி பூங்கொடி (58). இவர்கள் 2 பேரும் நேற்று சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். கொண்டலாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சீனிவாசன் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறியதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண் முன்பே கணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
