ஏரியில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு
பைல் படம்
மொளச்சூர் ஏரி நீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த, மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டோம், 68; இவருக்கு, சகாயமேரி, ஷீலா அன்னம்மாள், எல்பா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம், மீன்பிடிக்க வலையுடன் மொளச்சூர் ஏரிக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று காலை ஏரிக்கு சென்று பார்த்தபோது நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது. சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Next Story