பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட முதியவருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை !
கைது
திருப்பூரில் மளிகை கடைக்கு பென்சில் வாங்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட முதியவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் 40 ஆண்டுகள் கடும் காவல் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூரில் மளிகை கடைக்கு பென்சில் வாங்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட முதியவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மளிகை கடையில் நடத்தி வந்த அழகர்சாமி என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி தனது மளிகை கடைக்கு பென்சில் வாங்க வந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தை ஆசிரமத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அழகர் சாமியை போக்சோ பிரிவின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அழகர்சாமிக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
Next Story