கொல்லங்குடி அருகே சாலை விபத்தில் முதியவர் காயம்

விபத்தில் காயமடைந்த முதியவர்
சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் வீரையா(வயது 70). இவர் தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயற்சித்த போது, அதே சாலையில் மாவட்ட ஆட்சியர் பணிநிமித்தமாக தாசில்தார் வாகனம் மற்றும் காவல்துறை வாகனங்களுடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியருக்கு முன்பு வந்த தாசில்தார் வாகனத்தின் பின்னாடி வீரய்யா மோதியதில் சம்பவ இடத்தில் வீரையாகுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் வாகனத்தை விட்டு இறங்கி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் வர சிறிது நேரம் ஆகவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் தன் பாதுகாப்பிற்கு வந்த காவலர் வாகனத்திலேயே அந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து காவலர் வாகனம் பாதி வழியில் செல்லும் போது இடையில் ஆம்புலன்ஸ் வந்ததை தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸில் முதியோரை மாற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்
