லாரி மோதி முதியவர் பலி
பலி
திருவண்ணாமலை மாவட்டம், பெரும்புலிமேடு கிராமத்தில் முதியவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செல்ல பெரும்புலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (40),இவரது தந்தை நாகப்பன் (64) செய்யாறு- மாங்கால் சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக முதியவர் நாகப்பன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்தி லேயே பலியானார்.இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story