வேலகவுண்டம்பட்டி அருகே மூதாட்டி தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே மூதாட்டி தற்கொலை

 மரணம் 

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகரில் தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் நாமக்கல் மாவட்டம், போதுபட்டி, கிழக்குத் தெருவை சேர்ந்த பிச்சமணி என்பவரது மனைவி சரோஜா(60) என்பவர் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு தங்கி‌ இருந்து வந்துள்ளார்.

N இந்த நிலையில் நேற்று சரோஜா முதியோர் இல்லத்தில் உள்ள குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வருவதாக சென்றவர் வெகு நேரம் ஆகியும் வரவில்லை. சந்தேகமடைந்து அவருடன் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்தவர்கள் குளியலறைக்கு சென்று கதவை தட்டி உள்ளனர். ஆனால் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சரோஜா குளியலறைக்கு மேலே உள்ள ஒரு கம்பியில் சேலையால் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சரோஜாவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story