ரயில் விபத்தில் மூதாட்டி பலி

ரயில் விபத்தில் மூதாட்டி பலி

மூதாட்டி பலி 

பட்டுக்கோட்டை அருகே ரயில் என்ஜினில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது70). செவ்வாய் இரவு பேச்சியம்மாள் ரயில்வே பாதையை கடந்து எதிரில் உள்ள டீக்கடைக்கு சென்று, டீ வாங்கிக்கொண்டு திரும்பி வந்தார். பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் பகுதிகளில் ரயில் பாதையில் ஜல்லி நிரப்பும் பேக்கிங் மிஷின் ரயில் என்ஜின் மூலம், இருப்பு பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.

செவ்வாய் மதியம் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினத்துக்கு ஜல்லிபேக்கிங் என்ஜின் புறப்பட்டு சென்றது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முதல்சேரி என்ற பகுதிக்கு சென்ற போது பேச்சியம்மாள் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது என்ஜினில் அடிபட்டு பேச்சியம்மாள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

இது குறித்து அவரது கணவர் நாகப்பன் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை ரயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story