சேலத்தில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியில் பேரனின் மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், கன்னங்குறிச்சி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (வயது 83). இவருக்கும், பேரனின் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர். இந்த நிலையில் பாக்கியம் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்- இன்ஸ்பெக்டர் மோனிகா ஆகியோர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story