திருப்பூர் மன்னரைப் பகுதியில் நகைக்காக மூதாட்டி கொலை.
கொலையான மூதாட்டி
திருப்பூர் மன்னரை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 3 கிராம் நகை, செல்போன் மற்றும் 2000 பணம் கொள்ளை. 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை. திருப்பூர் மன்னரை அடுத்த பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணியம்மாள் (70). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் இவரது வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான மூன்று வீடுகள் உள்ளது அதனை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு வீட்டில், திருப்பூரை சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மணியம்மாவிடம் அதிகமாக பணம் இருப்பதை அறிந்த செந்தில்குமார் அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னுடன் பணியாற்றும் மதுரையை சேர்ந்த போதிராஜன் சதீஷ் ஆகியோரை கூட்டு சேர்த்துள்ளார். நேற்று நள்ளிரவு மது போதையில் மணியம்மாளின் வீட்டுக்குள் நுழைந்த செல்வகுமார் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் இருந்த சார்ஜர் ஒயரை கொண்டு மணியம்மாளின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் வீட்டில் நகை, பணத்தை தேடிஉள்ளனர். ஆனால் அங்கு மூன்று கிராம் நகை செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணம் மட்டுமே இருந்தது. அதனை திருடிவிட்டு வீட்டை வெளி பக்கமாக பூட்டி சென்றுள்ளனர். இதனிடையே வீடு வெளிப்பக்கமாக பூட்டி இருக்கும் சூழலில் வீட்டின் உள்ளே லைட் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மணி அம்மாள் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் அவரது வீட்டில் குடியிருந்த செந்தில் குமார் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது மொபைல் எண்ணை கொண்டு அவர் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார் அங்கு சென்று செந்தில்குமாரை பிடித்து விசாரித்தனர் அப்பொழுது பணத்துக்காக தன் நண்பர்களுடன் சேர்ந்து மணியம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் இதை எடுத்து செந்தில்குமார், போதிராஜன், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags
Next Story