கார் மோதி மூதாட்டி பலி

X
மூதாட்டி பலி
சாலை விபத்தில் கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கீழையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குருமணங்குடியை சோ்ந்தவா் மூதாட்டி நாகம்மாள் (70). இவா் திருமணங்குடியில் கிழக்குக்கடற்தரை சாலையில் நடந்து சென்றபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்ததாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி நாகம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Tags
Next Story
