கார் மோதி மூதாட்டி பலி
மூதாட்டி பலி
வரஞ்சரம் அருகே கார் மோதிய விபத்தில் மூதாட்டி பலி.
வரஞ்சரம் அருகே கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற மூதாட்டி இறந்தார். சங்கராபுரம் தாலுகா, பொய்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் முத்துவேல், 27; இவர், நேற்று முன்தினம், தனது பாட்டி அலமேலுவுடன், 80; யமாகா பைக்கில் வயலப்பாடி நோக்கி சென்றார். கூத்தக்குடி காலனி அருகே சென்ற போது, அதே திசையில் வேகமாக வந்த கார், முத்துவேல் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த அலமேலு சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த முத்துவேல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story