டூவீலர் மோதியதில் மூதாட்டி பலி

டூவீலர் மோதியதில் மூதாட்டி பலி
குமாரபாளையத்தில் நடந்து சாலையை கடந்த மூதாட்டி மீது டூவீலர் மோதியதில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை சிவசக்தி நகரில் வசிப்பவர் ஜெயலட்சுமி, 58. தனியார் பள்ளி ஆயா வேலை. இவர் நேற்றுமுன்தினம் மாலை 05:00 மணியளவில் சாலையை கடந்து, மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு, திரும்ப சாலையை நடந்து கடந்த போது, வேகமாக வந்த பஜாஜ் பல்சர் வாகன ஓட்டுனர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

இவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் வழியில் இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து, விபத்துக்கு காரணமான, டூவீலர் ஓட்டுனர் தருமபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபி, 28, என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story