மூதாட்டி பேனாவால் குத்தி கொலை

மூதாட்டி பேனாவால்  குத்தி கொலை
தனியாக இருந்த மூதாட்டியை பேனாவால் (பால்பாயிண்ட் பேனா) குத்தி கொலை செய்த மரும நபர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை
தனியாக இருந்த மூதாட்டியை பேனாவால் (பால்பாயிண்ட் பேனா) குத்தி கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் 75 வயது மதிக்கத்தக்க வேலம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார் கணவர் இறந்த நிலையில் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரித்து விட்டு சிறிய வீட்டில் தனியாக செட் அமைத்து வசித்து வருகிறார்.

இவருக்கு சரியாக நடக்க முடியாது மற்றும் காது கேட்காத பிரச்சனை இருப்பதாகவும் மூதாட்டி வசித்து வரும் பகுதிக்கு எதிரே இவருடைய மகளும் வசித்து வருகிறார். மகள் வீட்டில் இன்று மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது அதன் பின்பு மாலை 5 மணி 30 நிமிடம் அளவில் அவருடைய உறவினர்கள் சென்று பார்த்த போது வீட்டில் பார்த்தபோது மூதாட்டி பேனாவால் பல்வேறு இடங்களில் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதை அடுத்து இது குறித்து கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா விசாரணை நடத்தினர். இறந்த மூதாட்டியின் உடல் உடற்குறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மூதாட்டியை பேனாவால் கொலை செய்த நபர் யார் அவர் சைக்கோ கொலையாளியா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story