மாநகராட்சியில் பழமையான மரம் வெட்டி சாய்ப்பு; மக்கள் அதிர்ச்சி

மாநகராட்சியில் பழமையான மரம் வெட்டி சாய்ப்பு; மக்கள் அதிர்ச்சி

தூத்துக்குடி மாநகராட்சியில் பழமையான மரம் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பசுமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் பழமையான மரம் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பசுமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் புதிய மாநகராட்சி அலுவலத்தில் இருந்த பழமையான வேப்ப மரத்தை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஊழியர்கள் எந்திரம் மூலம் வெட்டியுள்ளனர். மாநகராட்சி அலுவலகம் கட்டப்படுவதற்கு முன்பாக பழைய வண்டிப் பேட்டையாக இருந்த காலத்தில் இருந்த அந்த மரம் அங்கு இருந்துள்ளது. மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் மக்கள் இளைப்பாறும் வகையில் இருந்த நிழல் தரும் மரமாக அது விளங்கியது. மரம் வெட்டப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி முகப்பு பகுதியில் தேசியக் கொடியை மறைப்பதாக உள்ளதால் மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மரம் முழுமையாக வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதாக பசுமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story