ஓம் காளி அம்மன் பண்டிகை - பக்தர்கள் மாறுவேட உலா

எடப்பாடி அருகே போடிநாயக்கன்பட் ஓம் காளி அம்மன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்துகொண்டு ஆடி பாடியபடி ஊர்வலம் வந்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓம் காளி அம்மன் பண்டிகையானது நேற்று காலை வெகு விமர்சியாக பூ மிதி திருவிழாவுடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் நூற்றுக்கணக்கானோர் சாமி மற்றும் பல்வேறு மாறுவேடம் அணிந்து மேளதாளங்களுடன் உற்சாகமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடி முக்கிய வீதி வழியாக வலம் வந்தனர் இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Tags

Next Story