ஓமலூர் : கரும்பு ஆலையில் தீ விபத்து - ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜவாய்க்கால் பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவருடைய மகன் குப்புராஜ் இவரது கரும்பாலையில் மின் கசிவு காரணமாக எதிர்பாராதமாக தீப்பிடித்துள்ளது. இதையடுத்து தீயானது கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.இதை பார்த்த குப்புராஜ் அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டுள்ளார்.
ஆனால் அந்த முயற்சி வீண் போனதால் ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். சம்பவம் அறிந்த வருவாய் துறையினர் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீப்பிடித்து குறித்து விசாரணை நடத்தினர். இந்த தீவிபத்தில் சுமார் 2லட்சம் மதிப்பிலான மரத்தால் ஆன வெள்ளம் தயாரிக்கும் தொட்டி, வெல்லம் தயாரிக்கும் கொப்பரை உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் இந்த தீபத்தில் உயிர் சேதம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.