வாகனங்கள் மீது மோதிய ஆம்னி பேருந்து

வாகனங்கள் மீது  மோதிய ஆம்னி பேருந்து

மகேந்திரா சிட்டி சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது  மோதிய ஆம்னி பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.


மகேந்திரா சிட்டி சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது  மோதிய ஆம்னி பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது திருச்செங்கோட்டில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதியதில் 5 வாகனங்கள் சேதமடைந்தன. வார விடுமுறை முடிந்ததால் வெளியூா் சென்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வாகனங்களில் சென்னையை நோக்கி வரத் தொடங்கினா். இதன் காரணமாக சென்னையின் நுழைவுவாயிலான செங்கல்பட்டு பகுதியின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மகேந்திரா சிட்டி சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த வாகனங்கள் மீது திருச்செங்கோட்டில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து மோதியது. இதில், 2 காா்கள், வேன் என 5 வாகனங்கள் சேதமடைந்தன.

இதன் காரணமாக மகேந்திரா சிட்டியில் இருந்து சுமாா் மூன்று கி.மீ. தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீஸாா், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். சிக்னலில் பேருந்து நின்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த ஆம்னி பேருந்து மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வாகனத்தை அகற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Tags

Next Story