தலைவாசல் அருகே தீப்பிடித்து ஆம்னி வேன் நாசம்
தலைவாசல் அருகே தீப்பிடித்து ஆம்னி வேன் நாசம் அடைந்தது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே கோவிந்தம்பாளையம் ஊராட்சி கம்பளிமேட்டை சேர்ந்தவர் முத்துவேல்,40. காய்கறி வியாபாரியான இவர் நேற்று, தலைவாசல் தின சரி மார்க்கெட்டுக்கு ஆம்னி வேனில் சென்றுவிட்டு, காலை, 10:00 மணிக்கு, தலைவாசல் -ஆறகளூர் சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
மும்முடி விநாயகர் கோவில் அருகே வந்தபோது, 'காஸ்' கசிவால், வேன் தீப் பிடித்து எரியத்தொடங்கியது. உடனே முத்துவேல், வேனை நிறுத்திவிட்டு இறங்கினார்.
10:30 மணிக்கு, ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வேன் முழுதும் எரிந்து நாசமானது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags
Next Story