ஓசூரில் பள்ளியின் கேட்டை உடைத்து கொண்டு ஓட்டிய ஆம்னி

ஓசூரில் பள்ளியின் கேட்டை உடைத்து கொண்டு ஓட்டிய ஆம்னி

ஆம்னி பேருந்து

ஓசூரில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு நடந்த சாலை பாதுகாப்பு மாத விழா: விழிப்புணர்வில் பங்கேற்று பள்ளியின் கேட்டை உடைத்து கொண்டு ஆம்னி பேருந்து ஓடியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியல் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஏற்ப்பாட்டில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு கருதி சாலைப் பாதுகாப்பு மாத விழாவினையொட்டி சாலை விதிகளை பின்பற்றக்கூடிய விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது..

நிபுணர்களை கொண்டு சாலையை கடப்பது குறித்து 4 மணிநேரம் உபதேசிக்கப்பட்ட முகாமில் 400க்கும் மேற்ப்பட்ட தனியார் பள்ளி ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பங்கேற்றிருந்தனர்.. விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து அனைவரும் பள்ளிகளுக்கு திரும்பிய நிலையில் தனியார் பள்ளி ஆம்னி காரை ஓட்டி வந்த ஓட்டுநர் குடிபோதையில் பள்ளி வளாகத்திலிருந்து ஆம்னி காரை அதிவேகமாக இயக்கி பள்ளியின் கேட்டை உடைத்துக்கொண்டு சென்று மரத்தின் மீது மோதி நின்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

விழிப்புணர்வில் பங்கேற்று சில நிமிடங்கள் கூம ஆகாத நிலையில் குடிபோதையில் ஓட்டுநர் இருந்ததும், மின்னல் வேகத்தில் காரை இயக்கி கேட்டை உடைத்து பலத்த காயமடைந்துள்ளார். விசாரணையில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளானவர் அசோக்(45) என்பது தெரியவந்துள்ளது..

பள்ளி வளாகத்திலேயே மின்னல் வேகத்தில் இயக்கப்படும் கார் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தும் வகையில் உள்ளது.. சனிக்கிழமை என்பதால் அதிர்ஷ்ட வசமாக பள்ளியில் எந்த மாணவர்களும் இல்லை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது..

Tags

Next Story