திருப்பரங்குன்றம் கோவிலில் 13ந் தேதி உற்சவ விழா தொடக்கம்

திருப்பரங்குன்றம் கோவிலில் 13ந் தேதி உற்சவ விழா தொடக்கம்

திருப்பரங்குன்றம் கோவிலில் வசந்த உற்சவ விழாவை ஒட்டி கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபம் வர்ணம் தீட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது

திருப்பரங்குன்றம் கோவிலில் வசந்த உற்சவ விழாவை ஒட்டி கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபம் வர்ணம் தீட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் விசாகத் திருவிழாவும் ஒன்று இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 8 நாட்கள் வசந்த உற்ச விழாவாகவும் ஒரு ஆள் விசாக விழாவாகவும் மற்றொரு நாள் மொட்டை அரசு உற்சவம் என பத்து நாட்கள் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு விழா வருகிற 13-ஆம் தேதி உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கும் சண்முகர் சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கும் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்குகிறது. இந்த வசந்த உற்சவ விழாவை ஒட்டி கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபம் வர்ணம் தீட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது மேலும் வசந்த மண்டபத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது

Tags

Next Story