ஏப்ரல் 22, 23-ல் காளிகேசம் காளியம்மன் கோவில் கொடை
காளியம்மன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காளிகேசத்தில் சக்தி வாய்ந்த காளிஅம்மன் கோவிலில் வருகின்ற ஏப்ரல் 22, 23, திங்கள், செவ்வாய் ஆகிய தேதிகளில் வருடாந்திர கொடைவிழா நடைபெறுகிறது. முதல் நாளான ஏப்ரல் 22ம்தேதி திங்கட்கிழமை 10 மணிக்கு அபிஷேகத்துடன் விழா தொடங்குகிறது. 2 -ம் நாளான ஏப்ரல் 23 ம்தேதி செவ்வாய் கிழமை காலை 6 மணிக்கு மஹா கணபதி ஹோமம் மற்றும் கும்ப பூஜை, 9மணிக்கு அம்மனின் மூலஸ்தான இடமான காளிகசத்தில் இருந்து முத்துக்குடை மேள தாளத்துடன் அபிஷேக குடங்களுடன் புனித நீர் எடுத்து வருதல், பகல் 11 மணிக்கு 18வகையான சிறப்பு அபிஷேகம், 12மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
மதியம் 1மணிக்கு உச்சகால பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை, மாலை 6மணிக்கு நாதஸ்வர மேளம், இரவு 7மணிக்கு படப்புக்கல்விளை பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க அலங்கார விளக்கு கெட்டு காளிகேசம் காளியம்மன் கோவில் வந்து சேரும்.தொடர்ந்து இரவு 12மணிக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு பூ படைப்பு, இரவு 1மணிக்கு சுவாமிகளுக்கு ஊட்டு படைத்தல், இரவு2 மணிக்கு ஊட்டு பிரசாதம் வழங்குதல், அதிகாலை 4 மணிக்கு மஞ்சள் நீராடுதல், காலை 5 மணிக்கு வாழ்த்து பாடுதல், 5.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற இருக்கின்றன. கொடை விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.