முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள்
திமுக இளைஞரணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள்
நாமக்கல் கிழக்கு மாவட்டம், ராசிபுரம் நகரத்தில் மார்ச் 1 கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் ஆலோசனை படி, இளைஞர் அணி சார்பில் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் அனைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.கார்த்திக் ஏற்பாட்டில் ராசிபுரம் நகர கழகச் செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமை தாங்கினார். ராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஆசைத்தம்பி, கந்தசாமி, செல்வம், விநாயகமூர்த்தி நட்ராஜ், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ஆனந்த், இளைஞர் அணியினர் கிஷோர் குமார், நவக்குமார், ராம்குமார், சிபிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.