இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் தொகுப்பு வழங்கல் 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் தொகுப்பு வழங்கல் 
மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது
மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது 
தஞ்சாவூர் மாவட்டத்தில், முன்னோடி வங்கியான திகழும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 88 ஆவது நிறுவன தின விழாவை முன்னிட்டு, சனிக்கிழமையன்று, தஞ்சாவூர், இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தின் ஆதரவு இல்லத்தில், மாவட்ட ஆட்சித் தலைவரும், இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவன சமுதாய பொறுப்பு நிதியின் மூலம், மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள். இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் நாகேஸ்வரராவ், உதவி பொது மேலாளர் கோடீஸ்வரராவ், முதன்மை மேலாளர்கள், முன்னோடி வங்கி மேலாளர், வங்கி அலுவலர்கள் இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தின் தஞ்சாவூர் மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தில், வங்கியும் செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது. மேலும், முதன்மை மண்டல மேலாளர் மற்றும் வங்கி அலுவலர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்திலிருந்து, அன்னை சத்யா விளையாட்டு மைதானம் வரையில், "மரங்களை வளர்ப்போம், பசுமையை பேணுவோம்" என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பெருநடை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story