அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் விழிப்புணர்வு

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் விழிப்புணர்வு

விழிப்புணர்வு ஏற்படுத்திய நிர்வாகிகள்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக குளுக்கோமா வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியியல் பிரிவின் சார்பில் உலக குளுக்கோமா வார விழிப்புணர்வு நிகழ்ச்சியை அஸ்தம்பட்டி, பேர்லேண்ட்ஸ் பகுதிகளில் நடத்தியது.

துறையின் டீன் பேராசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகர கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். துறையை சேர்ந்த கண் ஒளியியல் பிரிவு மாணவ, மாணவிகள் பங்கேற்று குளுக்கோமா நோய், அதன் அறிகுறிகள்,

தடுக்கும் வழிமுறைகள், ஆபத்து காரணிகள், மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை துறையின் கண் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளர் தமிழ்சுடர் மற்றும் உதவி பேராசிரியர்கள் சவுந்தர்யா, மெய்பிரபு, ராம்பிரசாத், திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story