குமரி வனத்துறை சார்பில் மலைகளில் தீயணைக்க தனிப்படைகள் உருவாக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மலைகள் உள்ளன. அவை தொடர் மலகளாகவும், தனித்தனி மலைகளாகவும் உள்ளன. இந்த மலைகளில் கோடை காலங்களில் தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
மழைக்காலத்தில் கோரை புற்கள் வளர்வதற்கு ஏதுவாக மனிதர்களே தீ வைக்கிறார்கள். மேலும் பீடி ,சிகரெட் துண்டுகள் மூலமாகவும் தீ பிடிக்கிறது.
அவ்வாறு பிடிக்கும் தீயினை அணைப்பது என்பது முடியாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் குமரி மாவட்டம் மலைகளில் தீ விபத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து மலைகளில் தீப்பற்றினால் அதை அணைக்க தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வனத்துறை சார்பில் கூறிய போது,- குமரி மாவட்ட வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் அது மேற்கொண்டு பரவாமல் தடுக்க பயர் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்ட வன அலுவலகம் மற்றும் சரக அலுவலகங்களில் இரவு கண்காணிப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். என்றனர்.