சாலையில் வாழை நட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் பேராட்டம்.
குமரி மாவட்டம் பேயன்குழி முதல் குருந்தன்கோடு வரையுள்ள இரட்டைக்கரை கால்வாய் வழியாக செல்லும் வலதுகரை சாலை மிகவும் சீரழிந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து வாழை நடும் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் செருப்பங்கோட்டில் நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் குருந்தன்கோடு வட்டாரக்குழு உறுப்பினர் சேது தலைமை வகித்தார். வாட்டாரச் செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதாஸ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய அவர்கள் நடைபயணமாக செருப்பங்கோடு ஊசிக்காட்டு சிவ சுடலைமாடன் சுவாமி கோவில் முன்பு சாலையில் உள்ள பள்ளத்தில் வாழை மரங்களை நட்டனர். இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
Next Story