டிச.10 ல் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு - கீதா ஜீவன்

X
அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக, மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக, மாவட்டச் செயலரும் அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கலைஞா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 10) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. சென்னையில் கடந்த நவ. 26இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்ட முடிவுகள், இம்மாதம் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞரணி மாநில மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது, வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் பணி, கட்சி வளா்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. எனவே, கூட்டத்தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் உள்பட அனைத்து நிா்வாகிகளும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
Next Story
