குமரி குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது  சுய உதவிக் குழு பெண்கள் புகார்

குமரி குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது   சுய உதவிக் குழு பெண்கள் புகார்

மனு அளித்த பெண்கள்

குமரி குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது  சுய உதவிக் குழு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுய உதவி குழுக்கள் சார்பில் அரசு வங்கிகளில் கடன் பெற்று கிராமபுறம் மற்றும் கடற்கரை பகுதி மக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது போன்று குமரியில் திருவரம்பு என்ற பகுதியில் ரஞ்சிதா என்பவர் தலைமையில் தனியார் சுய உதவி குழு மற்றும் தொண்டு நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அரசு வங்கிகளில் கடன் பெற்று, கடற்கரை கிராம மக்களுக்கு கடன் வாங்கிக் கொடுப்பதுடன், . அந்த கடன் தொகையை மாதம் தோறும் வட்டியுடன் வசூலித்து வங்கியில் செலுத்தியும் வந்துள்ளனர்.

அரசு வங்கிகளில் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் உதவிகள் கிடைப்பதால் கடற்கரை கிராம மக்கள் அதனை பெரிதும் பயன்படுத்தி வந்தனர். சுய உதவி குழுவினரின் இந்த செயலால் கந்து வட்டி கும்பல்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கந்து வட்டி கும்பல், வங்கிகளில் கடன் வாங்கிய மக்களிடம் சென்று கடன்களை திருப்பி செலுத்த வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதனால் கடன் தொகை வசூலிக்க செல்லும் இந்த தனியார் சுய உதவி குழு பெண்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மீண்டும் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு, இதற்கு விசாரணை அதிகாரியாக நாகர்கோவிலில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயந்தி என்பவரை நியமனம் செய்யப்பட்டது. ஆனால் ஜெயந்தி மனு கொடுத்தவரிடம் விசாரணை நடத்தவில்லை. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதும் விசாரணை நடத்தாமல் வழக்கை முடிக்க மிரட்டி வருவதாக புகர் எழுந்துள்ளது.

கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் விசாரணை அதிகாரி ஜெயந்தி என்பவர் செயல்பட்டு வருவதாக இன்று (26-ம் தேதி) குமரி எஸ் பி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் கூறபட்டு உள்ளது.

Tags

Next Story