மாற்றுத்திறனாளி பயிற்றுநர்களுக்கு பணியிடை வேலையில் பயிற்சி

மாற்றுத்திறனாளி பயிற்றுநர்களுக்கு பணியிடை வேலையில் பயிற்சி
X

பயிற்சி வகுப்பு 

பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற - மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்புப் பயிற்றுநர்களுக்கான மூன்று நாள் பணியிடை பயிற்சியினை முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் ,தொடங்கி வைத்து, பேசினார் அப்போது சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்து அனைத்துப்பள்ளிகளிலும் ஒலிபரப்பப்பட வேண்டும் எனவும், பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளான பணப்பலன்கள் மற்றும் உதவி உபகரணங்களை பெற்று தருவதில் சிறப்பு பயிற்றுநர்கள் பங்கு முக்கியமானது என்றும் குழந்தைக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், இப்பயிற்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் சுரேஷ், இடைநிலை உதவித் திட்ட அலுவலர் ஜெய்சங்கர், தொடக்கநிலை உதவித் திட்ட அலுவலர் ரமேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினர். கருத்தாளர்களாக சிறப்பு பயிற்றுநர்கள் கோவிந்தராஜ், வின்சென்ட், ஜெனிட்டா ஆகியோர் கலந்துகொண்டு கருத்துறை வழங்கினார்கள் இதில் சிறப்புக் குழந்தைகளுக்கு முதலுதவி கொடுக்கப்படும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், முதலுதவி வழங்கப்படும் பொழுது தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் கேட்கும் திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் தனிநபர் திட்டம் வகுத்து, பயிற்சியளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை வழங்கினர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் வரவேற்புரை ஆற்றிய இப்பயிற்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் பணியாற்றும் 25 சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story