நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தினர் ரத்ததானம் !

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தினர் ரத்ததானம் !

ரத்ததானம்

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

சேலம் மாநகர் மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமை தாங்கினார். விழாவையொட்டி ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி பகுதிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் கோவில்களில் விஜய் பெயரில் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி பகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் சார்பில் 250 பேர் கலந்து கொண்டு அரசு ஆஸ்பத்திரிகளில் ரத்ததானம் செய்தனர்.

Tags

Next Story