திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசனம் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில்
திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசனம் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் சர்வதோச பரிகார ஸ்தலம் ஆகும். இக்கோவிலில் சைவ சமயங்களில் தலைமை பீடமாகவும் விளங்குகிறது. இங்கு பங்குனி உத்திரம் ,மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா என இரண்டு முறை பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழாவையொட்டி 25ஆம் தேதி தியாகராஜர் தனது சன்னதியில் இருந்து புறப்பட்டு ராஜநாராயண மண்டபத்தில் எழுந்தருளுவார். அதனைத் தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் நடராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. மறுநாள் 27ஆம் தேதி காலை 6 மணிக்கு தியாகராஜர் பதஞ்சலி வியாக்கரபாதம் முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story