ஊராட்சி துணைத் தலைவருக்கு மிரட்டல்: ஒருவா் கைது
கைது
கயத்தாறு அருகே ஊராட்சி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வில்லிசேரி முடுக்குத் தெருவைச் சோ்ந்த போலையா மகன் காசிராஜன் (66). வில்லிசேரி ஊராட்சி துணைத் தலைவரான இவா், கடந்த புதன்கிழமை திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தாராம்.
கருங்காலிப்பட்டி வடக்குத் தெருவை சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராஜாராம், சீனி வெள்ளாளபுரத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சீத்தாராமன் (60) உள்ளிட்ட 3 போ் அவரிடம் வந்து ‘ரேஷன் அரிசி கடத்தியதாக தகவல் அளித்தது ஏன்?’ எனக் கேட்டு மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து சீத்தாராமனை நேற்று கைது செய்தனா்.
Next Story