ஞானமணி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு !
ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சார்பாக ஞான் கெம் 2கே24 என்ற தலைப்பில்; ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சார்பாக ஞான் கெம் 2கே24என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இவ்விழாவில் 15-க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரியிலிருந்து 180 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஞானமணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.மாலாலீனா அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி மனஷா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் தி.அரங்கண்ணல் அவர்கள் தலைமையுரையாற்றினார். ஞானமணி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மதுவந்தினி அரங்கண்ணல்ரூபவ் முதன்மை செயல் அதிகாரி முனைவர் பி.பிரேம்குமார்ரூபவ் கல்வி இயக்குநர் முனைவர் பி.சஞ்செய் காந்திரூபவ் டீன்- இரசாயன அறிவியல் முனைவர் வி.பாஸ்கரன்ரூபவ் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எஸ்.செல்வராஜன்ரூபவ் இன்னோவேசன் மற்றும் இங்குபேசன் ஆலோசகர் முனைவர் ஆர்.விஜயரங்கன்ரூபவ் துனை முதல்வர் முனைவர் கே.சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக அகமதாபாத்தை சார்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் உயர் கல்வி மாணவர்கள் அவர்களுடைய திறமைகளை புத்தாக்க செயல்களின் ஈடுபடுவதன் மூலம் புதிய பொருள்களை உருவாக்குவதற்கும் பல்வேறு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அடித்தளமாக அமைகிறது. இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அகமதாபாத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மேலாண்மை பயிற்சிகள் வாயிலாக பல்வேறு சிறந்த ஸ்டாட்-அப்மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கி வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை துறைவாரியாக சமர்ப்பித்தனர். இயற்பியல் 55 ஆய்வுக் கட்டுரைகளும்,வேதியலில் 56 ஆய்வுக் கட்டுரைகளும், கணிதத்தில் 29 ஆய்வுக் கட்டுரைகளும், ஆங்கிலத்தில் 15 ஆய்வுக்கட்டுரைகளும் 20 சித்திர விளக்க படங்களும் 8 குறும் படங்கள் சமர்பிக்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.கே.கண்ணன்; அவர்கள் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்கள். ஞானமணி பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி செல்வி.மகேஸ்வரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.