ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிகடைகள் கடையடைப்பு

ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிகடைகள் கடையடைப்பு

கடையடைப்பு போராட்டம்

ஜவுளித்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி மத்திய அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு சமீபத்தில் சிறுகுறு தொழி்ல் நிறுவனங்கள் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு 15 நாள் முதல் 45 நாட்களுக்குள் வருமான வரியாக செலுத்த வேண்டும் , தவறும் பட்சத்தில் நிறுவனங்களுக கான அசலாக கருதப்படும் என்றும் கூறி மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தில் பிரிவு 43B(h) மாற்றம் கொண்டு வந்துள்ளது.இதை முன் தேதியிட்ட அமுல்படுத்தி உள்ளதால் ஜவுளித்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி மத்திய அரசின் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் இன்று 5 க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் ஒரு நாள் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால். திருவேங்கடசாமி வீதி , ஈஸ்வரன் கோவில் வீதி , மணிக்கூண்டு போன்ற பகுதிகள் வெறிச்சேடி காணப்பட்டன.ஜவுளி வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தால் 100 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story