ஒரு நாள் மழையில் உருக்குலைந்த சாலை

ஒரு நாள் மழையில் உருக்குலைந்த சாலை

 உருக்குலைந்த சாலை

சாலையில் பட்டா கிராமத்தின் முகப்பு பகுதியில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகளாக சாலை சேதமாகி உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டா கிராமத்திற்கு அடுத்துள்ள சிறுதாமூர் பகுதியில், தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் ஏராளமான கனரக வாகனங்கள், பட்டா கிராமம் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு லோடு ஏற்றி செல்கின்றன. இதனால், இந்த சாலையில் பட்டா கிராமத்தின் முகப்பு பகுதியில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகளாக சாலை சேதமாகி உள்ளது. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சகதியாகிறது. அச்சமயம் வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்குவதில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அவ்வப்போது விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, பட்டா கிராமத்தில் பழுதடைந்த சாலை பகுதியை சீரமைத்து தர, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்

Tags

Next Story