நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் ஒரு நாள் பயிற்சி முகாம்
நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி
பிப்ரவரி -25 நாமக்கல் அடுத்த கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில்(Scouts and Guides) சிங்கக்குருளையர்கள் -- நீலப் பறவைகள் Cubes and bulbuls ) பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
மேலும் ஜூனியர் ரெட் கிராஸ் (JRC) தலைமை பொறுப்பேற்றனர். சிறப்புவிருந்தினராகவும், பயிற்சியாளராகவும் ரகோத்தமன் ALT நாமக்கல் மாவட்ட செயலாளர் அவர்களும், சடையம்மாள் Pre ALT மாவட்ட அமைப்பு ஆணையர் ஆகிய இருவரும் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பான பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள்.பயிற்சியில் மாணவர்களுக்கு சாரணர் சாரணியர் இயக்கதின் தோற்றம் வரலாறு அவற்றின் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. “விபத்து மற்றும் பேரிடர் சமயத்தில் முதலுதவி செய்வது தொடர்பாக பயிற்சிகள், உயிர் காக்கும் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டது”. மேலும் கூடாரம் அமைத்தல் போன்ற சிறப்பு பயிற்சிகளும், தற்காப்பு பயிற்சிகள், தன்னம்பிக்கை வளர்த்தல் தொடர்பான பயிற்சிகளும் கற்றுத்தரப்பட்டது. JRC மாணவ மாணவிகளுக்கு மனித நேயம் வளர்த்தல் தொடர்பான பாடல்கள். சேவைமனப்பான்மையை வளர்த்தல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் பாடல்கள் கற்றுத்தரப்பட்டது. நிகழ்சியின் நிறைவாக பள்ளி நிர்வாகத்தினருக்கும், பயிற்சியாளருக்கும், பெறுப்பாசிரியர்கள் இயக்கத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் பள்ளி முதல்வர் அவர்கள் நன்றி கூறினார். அனைத்து மாணவ, மாணவிகளும் ஆர்வமுடன் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு மகிச்சியுடன் வீடு திரும்பினார்கள்