கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஒருநாள் பயிற்சி

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஒருநாள் பயிற்சி
X

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஒருநாள் பயிற்சி

65 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலையில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஒருநாள் பயிற்சி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஊராட்சி மற்றும் வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் ஆகியோரது உத்தரவின்பேரிலும் உதவி இயக்குநர் (ஊரா ட்சிகள்) சரண்யாதேவி வழிகாட்டுதலின்பேரிலும் ஆணையாளர் மெ.பிரித்திவிதிராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) எஸ்.அருணாச்சலம் ஆகியோரது மேற்பார்வையில் நேற்று நடைபெற்றது.

இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி கள்) வாசு மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள் ஏ.சிவா பி.ஸ்ரீதேவி,பி.ரவி ஆகியோர் கலந்து கொண்டு 69 ஊரா ட்சி செயலாளர்களுக்கு பயிற்சியினை வழங்கினர். இந்த பயிற்சியில் உள்ளூர் அளவிலான நீடித்த நிலைத்த வளர் ச்சி, கிராம வளர்ச்சி திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், முன்மாதிரி கிராமம், சிறந்த கிராமமாக மாற்றுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் (நிர்வாகம்) கே.எம்.பழனி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரதீப்பாபு, சங்கவை, சங்கர சண்மு கம், ராயர், ஊராட்சி செயலாளர்கள் இரா.நாராயணன், பி.செ ல்வமணி, இரா.முருகன், எஸ்.பழனி, எஸ்.சந்திரசேகரன், கே.முருகன், உள்பட 65 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story