புத்தகம் எழுதும் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்..!

புத்தகம் எழுதும் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்..!

மாணவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்

எழுதுக புத்தகம்' எழுதும் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்..
எழுதுக புத்தகம்' எழுதும் அமைப்பு மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் , மாணவர்களின் படைப்பு திறனை வெளிக்கொண்டு புத்தகம் படிப்பவர்களையும், புத்தகம் படைப்பவர்களாக உருவாக்கும் நோக்கில் கடந்த 2021 வது ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு எழுதுக அமைப்பின் மூலமாக பயிற்சி பெற்ற 150 மாணவர்கள் எழுதிய 150 புத்தகங்கள் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு அவர்களால் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு எழுதுக 2024 மூன்றாம் அணியில் புத்தகம் எழுதும் மாணவர்களுக்கான நேரடி பயிலரங்கம் இன்று காஞ்சிபுரம் ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைப்பாளர் கில்லி வளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர்கள் , புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பள்ளிக் கல்லூரியில் பயின்ற மாணவர்களின் கதை கவிதை சிறுகதை நாவல் என பல்வேறு பிரிவுகளில் புத்தகம் எழுத வேண்டும் என்ற விருப்பம் அடைந்த மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயிலரங்கத்தில் கூறிய அறிவுரைகளை ஏற்று ஒரு நாள் முழுவதும் பயிற்சி பெற்றனர். இதில் காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சி ஆட்சியர் சங்கீதா மற்றும் மாவட்ட நீதிபதி செம்மல் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பல்வேறு கல்வியாளர்கள் பதிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். புத்தகம் எழுது வேண்டும் என்ற ஆர்வம், புத்தகம் வாசிப்பு பழக்கம் , பயிற்சிகளில் பங்கேற்றல் மற்றும் கடின உழைப்பு உள்ளிட்டவைகளை புத்தக படைப்பாளராக உருவாக்கும் தினமும் இதன் மூலம் தெரிய வந்ததாக இதில் கலந்துகொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story