கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி: 4பேர் படுகாயம்

கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி: 4பேர் படுகாயம்
X

விபத்து 

தூத்துக்குடி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4பேர் படுகாயம் அடைந்தனர். 
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் முருகன் (72). இவர் தனது மனைவி லட்சுமி (65), மகன் இசக்கிமுத்து கண்ணன் (46), மருமகள் பேச்சியம்மாள் (42), பேரன் சரவணன் விக்னேஷ் (20) ஆகியோருடன் வெளியூர் சென்று விட்டு காரில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார். காரை சரவணன் விக்னேஷ் ஒட்டி வந்தார். கிழக்கு கடற்கரை காலை ரோட்டில் மேல அரசரடி கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த ஒரு டேங்கர் லாரி கார் மீது மோதியயது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story