டூ வீலர் விபத்தில் ஒருவர் படுகாயம்

டூ வீலர் விபத்தில் ஒருவர் படுகாயம்
X

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர்  படுகாயமடைந்தார்

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர்  படுகாயமடைந்தார்
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் செல்லும் வழியில் முனியப்பன் தோட்டம் பகுதியில் வசிப்பவர் ஜெகநாதன், 56. டபுளிங் மெசின் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும், இவரது வீட்டில் வசிக்கும் கணேசன், 45, என்பவரும், நவ. 25ல், மாலை 05:00 மணியளவில், தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகம் சென்று, வீட்டு வரி ரசீது பெற்று திரும்பி வருகையில், சேலம் கோவை புறவழிச்சாலை, சர்வீஸ் சாலையில், பஜாஜ் டிஸ்கவர் டூவீலரை கணேசன் ஓட்ட, ஜெகநாதன் பின்னால் உட்கார்ந்து வந்தார். கொங்கு மண்டபம் அருகே வந்த போது, இவர்கள் வந்த டூவீலர் பின்னால் வந்த ஹீரோ ஸ்ப்லேண்டர் டூவீலர் ஓட்டுனர், வேகமாக மோதியதில், ஜெகநாதன் பலத்த காயமடைந்தார். ஜெகநாதன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான சங்ககிரி, வடுகப்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜ்குமார், 36, என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story